தாயின் அன்பு முத்தம்-வித்யா- போட்டிக்கவிதை

தாயின் அன்பு முத்தம்-வித்யா-போட்டிக்கவிதை

கண்களில் வலி
இதயத்தில் ரணம்
முகத்தினில் சோகம்
அம்மா.........உன்
ஒற்றை முத்தம் போதும்
என் மொத்த வலிகளின் நிவாரணி என.....!!

கடக்கவியலா தூரம்
மறக்கவொண்ணாத் துயரம்
உயிருலரும் சிறு ஈரம்
அம்மா...... உன்
ஒற்றை முத்தம் போதும்
என் வாழ்வோடு தென்றல் சேர........!!

தவிர்க்க இயலாக் கண்ணீர்
துரோகம் தாங்கும் நட்பு
உடைந்து போன மனது
கரைசேராக் காதல்
அம்மா.....உன் ஒற்றை முத்தம் போதும்
என் வழிகளின் வழித் திறந்திட........!!

அம்மா
உன் ஒற்றை முத்தம்
என் இழப்புகளனைத்தையும் ஈடு செய்திடுமா ?
என் வலிகள் அனைத்தையும் குறைத்திடுமா?
என் துயரங்களனைத்தையும் துடைத்திடுமா.?

இனியும் தாமதிக்காமல்
என் உச்சி முகர்ந்து
ஒற்றை முத்தம் பதித்திடு...........!!

உன் முத்தத்தில்
மொத்தத்தையும்
புதைத்துக் கொள்கிறேன்.......!!-P.VIDHYA
first year ME (APPLIED ELECTRONICS)
shri subramanya college of engineering
palani .

எழுதியவர் : வித்யா (22-Oct-14, 11:58 pm)
பார்வை : 365

மேலே