புத்தாண்டு என்பது புதுபிறப்பு

ஹிஜ்ரத் என்பது இடமாற்றம் -அது
கொண்டுவர வேண்டும் மனமாற்றம்
சுன்னத்து வழியே வரும்மாற்றம் -நல்
ஜன்னத்தை தந்திடும் ஈடேற்றம்

தொப்பியும் தாடியும் வெளித்தோற்றம் -நீ
ரப்பினை மறந்தால் ஏமாற்றம்
எண்ணத்தில் ஏனோ தடுமாற்றம்?-வா
முயன்று தேடுவோம் முன்னேற்றம்

புத்தாண்டு என்பது புதுபிறப்பு-அது
புலுங்கிடும் மனதிற்கு வழிதிறப்பு
சத்தாக தந்திடும் விழிதிறப்பு-புது
சிந்தனை நதிகளின் மடைதிறப்பு

நேற்றையின் தூசினை துடைத்திடுவோம்-நல்ல
பண்புடன் இன்றையைப் படைத்திடுவோம்
நாளையின் தடைகளும் உடைபடுமே-நம்
கேள்விகள் யாவுக்கும் விடைவருமே

குர்ஆனின் அறிவுரை கேட்டிடுவோம் -கெட்ட
குப்பையாம் பிரிவினை போட்டுடைப்போம்
உருவாகும் எதிர்காலம் ஒளிபெறவே-நம்
அரும்பெரும் திட்டங்கள் தீட்டிடுவோம்

இஸ்லாத்தின் ஒளிஎங்கும் பரவிடுமே -அது
இனிய நல்லுலகை வரவிடுமே
இந்நாளில் நாமெல்லாம் முடிவெடுப்போம்- இனி
ஒன்றாகி உயர்வாகும் படிநடப்போம்

-முகம்மது நவ்பல்
கிள்ளான்
...................................................................
ஹிஜ்ரத்-இடமாற்றம் /இஸ்லாமிய புதுவருடம்
சுன்னத்து-நபிவழி
ஜன்னத்-சொர்க்கம்
ரப்பினை-இறைவனை
குர்ஆன்-இஸ்லாமிய இறைவேதம்

எழுதியவர் : அபி (23-Oct-14, 1:39 pm)
பார்வை : 654

மேலே