நிறைவாய் வாழ்க

திருமணவாழ்த்துமடல்


திருமணநாள் வாழ்த்துமடல்

நிறைவாய் வாழ்க

தித்திக்கும் 16 [SWEET16] ஐக் கடந்து

“துள்ளுவதோ இளமை ; தேடுவதோ தனிமை;

அள்ளுவதோ புதுமை"



எனக் கட்டிளங்காளைகளாய் இல்லறம் எனும் நல்லறத்தில் நவ ஆண்டுகள் பவனி வந்து எதிர்நீச்சல் போட்டு இறைவன் வரப்பிரசாதங்களாய் அளித்த இரு வைரங்களைப் பொக்கிஷங்களாய் , உலக சாதனைப் படைக்கப் போகும் நட்சத்திரங்களாய் , அவனியில் உலாவரச் செய்வதோடு மட்டுமல்லாமல் இளமையும் இனிமையும் எள்ளளவும் குறையாது பசுமை நிறைந்த நினைவலைகளை அகத்தே இருத்தி அனைவரையும் ஈர்க்கும் புன்முறு வலும் இனிய குரல்வளமும் இனிமையான தன்மையான வாய்மொழிகளைக் கையாளும் வல்லன்மையையும் இறைவன் வரப் பிரசாதங்களாய் அளிக்க அதே துள்ளலோடும் துடிப்போடும் ---ஆம் அதே துள்ளலோடும் துடிப்போடும் தச ஆண்டில் காலடி பதிக்கும் சிட்டுக்குருவிகளே ! வானம்பாடிகளே !!





நிறைவாய் வாழ்க !

"தாய்மொழிக் கவிதையால் வாழ்த்துவது

தாய் வாழ்த்துவது போலாகும் "

எனும் திடமான நம்பிக்கையுடன் வார்த்தை மலர்களால்

படைக்க முயலும் கன்னி முயற்சி !! மணம் கமழும் மலர்க் கொத்து !!



வாய்மொழியாய் உதிர்த்தால் உதிர்ந்து பறந்துவிடும்

என நினைந்து இனிய தமிழ் மலர்க்கணைகளால்

வரிவடிவில் அலங்கரிக்க சிற்றறிவிற்கு எட்டியதை

இயன்றவரை உதிர்த்துள்ளேன் ! ஏற்றுக் கொள்ளுங்கள் !!



"யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று - தேவதைகள்

வந்து சொல்வதில்லை !..-- உறவுகள்

சேர்த்து வைத்த உங்களைக் காலமெல்லாம்

ஆம் !! உங்கள் ஆயுள் காலமெல்லாம் இதே நெருக்கம்,

அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து -- இல்லற வாழ்வில்

ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ



அந்த தேவதைகள் வந்து வாழ்த்தட்டும் 1!.

அன்புடனும். பண் புடனும் பல்லாண்டு வாழ்க !!

வளமுடனும் நலமுடனும் வாழ்க! வாழ்க !-- என

அந்த தேவதைகள் வந்து வாழ்த்தட்டும் 1!.



அவர்களின் வாழ்த்துகளை அவர்களின் சார்பாக

அன்புடனும். பண் புடனும் பல்லாண்டு வாழ்க !!

வளமுடனும் நலமுடனும் வாழ்க! வாழ்க !!-- என

வயதில் மூத்தோர் வாழ்த்துகிறோம்!

வயதில் இளையோர் வணங்குகிறோம்!!

கிரிஷ் குடும்பத்தினர்!!


"யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று - தேவதைகள்

வந்து சொல்வதில்லை !..-- உறவுகள்
சேர்த்து வைத்த உங்களைக் காலமெல்லாம் - ஆம் !!

உங்கள் ஆயுள் காலமெல்லாம் இதே நெருக்கம்,
அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து -- இல்லற வாழ்வில்
ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ
“அன்புடனும். பண் புடனும் பல்லாண்டு வாழ்க !!
வளமுடனும் நலமுடனும் வாழ்க! வாழ்க !”-- என
அந்த தேவதைகள் வந்து வாழ்த்தட்டும் 1!.

அவர்களின் வாழ்த்துகளை அவர்களின் சார்பாக
அன்புடனும். பண் புடனும் பல்லாண்டு வாழ்க !!
வளமுடனும் நலமுடனும் வாழ்க! வாழ்க !!-- என
வயதில் மூத்தோர் வாழ்த்துகிறோம்!
வயதில் இளையோர் வணங்குகிறோம்!!

கிரிஷ் குடும்பத்தினர்!!

எழுதியவர் : முனைவர்.வெ.வசந்.தா. (24-Oct-14, 6:37 am)
Tanglish : niraivaai vazhga
பார்வை : 140

மேலே