எண்ணம்

உலகம் உன்னை கவனிக்கும்
உன் செயல் சொல் யாவும் உன்னிப்பாக
உன் எழுத்துக்கள் உன்னை யாரென்றும்
உன் மனதில் உள்ளது என்னவென்றும்
உள்ளது உள்ளபடி படம் பிடித்துக் காட்டிவிடும்
நீ மறைத்தாலும் எழுத்துகள் எழுதியவையே
உன் எண்ணம் நல்லது என்றால்
தெளிந்த நீரோடை உன் எழுத்துக்களாகும்
ஆகையால் நல்லதையே நினை
உள்ளத்தில் தெளிவும் தூய்மையும் பிறக்கும்
நல்லவன் என்றும் நல்லவனே
அவன் எண்ணமும் என்றும் நல்லவையே

எழுதியவர் : பாத்திமா மலர் I (25-Oct-14, 12:59 pm)
Tanglish : ennm
பார்வை : 77

மேலே