என்பெயர் இதுதான்
கதிரவனைக் காணாது,
கதவுகளுக்குள் வாழ்ந்திருப்பேன்..
நான் காட்டேரி அல்ல..
கடமையைக் காட்டி,
காமத்தை ஒளித்திருப்பேன்...
நான் தபஸ்வியும் அல்ல..
யாவரின் முன்னும்
தமிழ்மொழி மொழியேன்..
நான் வெள்ளையனும் அல்ல..
உடம்பினை விற்றே
பொருளது ஈட்டுகின்றேன்..
நான் பரத்தையும் அல்ல..
அத்தனை வன்மங்களையும்,
அமைதியாய் காட்டுவேன்..
நான் எத்தனும் அல்ல...
சுடும் பணியால்,
வெந்து கொண்டிருப்பேன்..
நான் சடலமும் அல்ல..
குறைந்தவிலைப் பொருட்களை,
நிறையக் கொடுத்து வாங்குவேன்..
நான் வெகுளியும் அல்ல...
முப்பொழுதும் மொழியில்,
மூழ்கிக் கொண்டிருப்பேன்..
நான் கவிஞனும் அல்ல..
எத்தனை ஏய்ப்பினும்,
சத்தமாய்ச் சிரிப்பேன்...
நான் கோமாளியும் அல்ல...
இவ்வளவு வன்மைகளுடைய,
நான்தான் மென்பொருள் வல்லுநன் (Software Engineer)..