குடுகுடுப்பாண்டி
ஜக்கம்மா சொல்றா !!
ஜக்கம்மா சொல்றா !!
நல்ல காலம் பொறக்குது ...
நல்ல காலம் பொறக்குது ..
பால் விலை குறைய போகுது !
விலைவாசி குறைய போகுது !
கல்வி முறையிலே மாற்றம் வர போகுது !
மக்கள் ஒத்துமையா இருக்க போறாங்க !
பூம்.... பூம்... பூம் ........
அரசியவாதிகள்
ஆட்டத்தை குறைக்க போறாங்க ...
மனித நேயம் வளர போவுது !
சாலை நெரிசல் குறைய போவுது !
மக்கள் சந்தோசமா இருக்க போறாங்க !
பூம்... பூம்... பூம் ....
வறுமை ஒழிய போவுது !
வேலை வாய்ப்பு அதிகமாக போவுது !
ஊழல் ஒழிய போவுது !
வளமான நாடா இந்தியா ஆக போவுது !
பூம்.. பூம்.. பூம் ....
ஜக்கம்மா சொல்றா !
ஜக்கம்மா சொல்றா !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டினுள் இருக்கும் மனிதர்:
யோவ் !!!
துணி வேணுமா !
காசு வேணுமா !
அரிசி வேணுமா !
இந்தா
வாங்கிட்டு போவியா !!
நடக்க முடியாதது எல்லாம்
நடக்கும் நடக்கும் ன்னு
ஜக்கம்மா பேரை சொல்லி
ஊரை ஏமாத்தாதே !
போ ! போ !
எங்க வேலையே கெடுக்காதே !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குடுகுடுப்பாண்டி : ????????????????? (மனதிற்குள் )எங்க தொழில்லே மண்ணு போடுறியே நீ நல்ல இருப்பியா ??
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------