கொடை தென்றல்

மழைக்காற்று மனம் கவரும்
மாலை வேளையில்
மல்லிகை பூ மன(ண)க்காரி-என்
மனம் கவர்ந்த மந்திரவாதி
மலைகளின் இளவரசியின் மடியில்
என்னை கொண்டு சேர்த்தாள்

மதி மயங்கும் மாலை வேளை
விதி வசத்தால் இரவைத் தொட்டது
இருவரும் இணைந்தோம் ஒரு அறையில்

சத்தமில்லாத முத்தங்களால் என்
சப்த நாடிகளை கட்டிப்போட்டாள்
கட்டிலில்

உதட்டு சாயத்தால்
முகத்தில் முத்த
முத்திரை இட்டாள்

மின்வெட்டு நேரம் என்பதால்
மின்சிக்கனம் வேண்டி
விளக்குகளுக்கு விடுமுறை அளித்தோம்

கொடை தென்றல் குளிர்காற்றை பரப்ப
இளஞ்சூடு தேடி இருவரும்
புகுந்தோம் போர்வையினுள்

கிறங்கி கிடந்த நான்
மயங்கி கிடந்தவள்
மார்பை தலையணையாக்கி
உறங்கி போனேன்
அதன் பின் நடந்து எல்லாம் - வெளிச்சம்
இழந்த இரவுக்கு தான் வெளிச்சம்

விடிந்தது
விலக விழிகள் மட்டுமல்ல
உடல்களும் மறுத்தது

சோம்பல் விலக்கி கொண்டு
ஆம்பல் மலராய் இருந்தவளை
அள்ளிக் கொண்டு குளிப்பறையில்
புகுந்தேன் - எதற்காக
தண்ணீரையும், நேரத்தை மிச்சம்
செய்வதற்காக

குழந்தைகளாய் மாறி
குதுகலமாய் குளித்துவிட்டு
உலர்த்தும் பொழுது
அவள் மேல் உதட்டில் வழியும்
நீரை என் கீழ் உதட்டால் பருக
குறும்புக்காரி உதட்டை இழுத்து
பற்களின் நடுவில் வைத்து
கடித்து விட்டாள்..

ஏரிக்கரை சுற்றளவை
என்னவளோடு சுற்றி வந்தேன்
ஏதேதோ பேசி கொண்டே...

பூங்காவில் நடந்துக் கொண்டிருக்கையில்
கால் வலிக்கிறது என்ற சொன்னவளை
கணப் பொழுது கூட யோசிக்காமல்
துக்கி விட்டேன்
சுற்றி இருந்தோர் எல்லாம்
சூடு பரக்க பார்க்க - கண்களை
மூடிக்கொண்டு என் கை சிறையில்
இருந்தவள் போதும் இறக்கி விடு
என்று சொல்லி இறக்க மறுத்தன
கைகள், கைகள் மட்டுமா? அவளுடலும்
தான், இருந்தும் இறங்கி விலகி நடந்தாள்..........

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (28-Oct-14, 9:04 pm)
பார்வை : 215

மேலே