நல்ல வாழ்க்கைதான்
பழகிய உறவுகளை
பதம்
பார்க்கும்போது
உதவியென்று
எந்த
உறவிடம் கேட்க
கர்ணன்கூட
நீட்டியது
என் கையென்றால்
கஞ்சனாகிறான்
ஏராளமாய்
கிடைக்கிறது
ஏளனச்சிரிப்பு
அளவின்றி
கிடைக்கிறது
அவமானச்சிரிப்பு
கட்டுப்போடும்
கைகள்தான்
கிடைக்கவில்லை
பாதையெல்லாம்
பள்ளங்கள்
பார்க்கவில்லை
நல்ல
உள்ளங்கள்
கனவில்
கட்டிவைக்கிறேன்
கோட்டைகள்
கண்விழித்தால்
முதுகில்விழும்
சாட்டைகள்
வானம்நோக்கி
கைகள்
நீட்டினேன்
விரலிடுக்கில்
விலகிப்போனது
வாழ்க்கை மேகங்கள்
வலிகளோ
வாசல்தேடி
வருகின்றன
வாழ்க்கையோ
வாசல்தாண்டி
போகின்றன
கரையை
தாண்டி வரும்
கண்ணீரை
எந்த
அனைகள்கட்டி
அடைத்துவைக்க
பொய்களிங்கே
துதிக்கப்படும்
உண்மைகள்-மட்டும்
மிதிக்கப்படும்
பொய்வேஷம்
போடும்
உலகத்திலே
மெய்வேஷம்
போட்டுவந்தேன்
கடைசியில்
கிடைத்தது-சில
கல்லடிகள்
வளைந்து
போக
தெரியாததால்
உடைந்து
போகிறேன்
அன்பிற்கே
ஆசைபட்டேன்
துன்பத்திற்கு
வாக்கபட்டேன்
கோமாளி
உலகினிலே
ஏமாளி
ஆனதென்ன...
சிகரம்தொட
வந்தவன்
சிறைதேசம்
போனதென்ன...
நல்ல வாழ்க்கைதான்
இது
நல்ல வாழ்க்கைதான்