மழை நீர்
மழை முகில் மழழை
அழக் கண்ட தவளை
தாலாட்டுப் பாடுகின்றன!
அழக் கண்ட மழழை
தளிர் இதழ் பார்த்து
செல்லமாய் சினுங்கின்றன!
மழை நீர் அருந்தி
தாகம் ஒழித்து - பூமியின்
ஏப்பம் இடியாகின!
பூமித் துழையில்
கும்பி நிரைத்து
நட்ட மரங்கள் செழிப்பாயின!
ஆழக் கடலும்
கடனை மீட்டு
எழுந்தாடிக் களித்தன!.
ஓடை வழிகள்
சல சல என்றே
விழுந்தே எழுந்து குதுகலமாயின!
கமம் செய் உழவன்
கவலை விட்டு- மகிழ்வாய்
மனையவள் நோக்கினான்!
ஜவ்ஹர்