எப்போது விடியும்
கொட்டும் மலையில்
இடியின் கொட்டத்தில்
மின்னலின் ஆட்டத்தில்
இஞ்சியுடன் சேர்ந்த
சுவை நிறைந்த காபி குடிக்கும்
வெள்ளை குட்டி நாய்க்கு
பிஸ்கட் அளித்து
மழையை ரசிக்கும்
ரகமல்ல நாங்கள்....
எந்த நிமிடமும்
தலையில் இடிந்து விழும்
ஒட்டு வீட்டின் கூரையை
நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து பார்த்து
செத்துப் பிழைக்கும்
ஏழை ஜாதி நாங்கள்....
தினமும் விடியும்
ஆனால் எங்களுக்கு எப்போது விடியும்??