நவீன புதுமொழிகள் பகுதி 2

வலிகளில்தான் தெரிகிறது
நமக்கான பலம்

நண்பனை நேசிப்பதைவிட
உன் எதிரியை நேசி

உன் எதிரி உணரும்படி நட
உன் பலம் அதிகரிக்கும்

எந்த தோல்வியும் நல்ல பாடம்
வெற்றிக்கான பாதை

எந்த வெற்றியும் சொல்வதில்லை
அதற்குமுன் உள்ள தோல்விகளை

வெற்றியை அறிவுக்கும்
தோல்வியை மனதிற்கும்
கொண்டு செல்கையில்
தடைபடும் உன் வளர்ச்சி

பாசத்தை சோதனை செய்யுமுன்
உனக்கு கிடைத்த உதவியை யோசி

இன்றைய கடன்
நாளைய நெருக்கடி
திட்டமிடு வட்டமிடும் வெற்றி உன்னை

எழுதியவர் : ருத்ரன் (31-Oct-14, 2:44 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 85

மேலே