சாம்பல் பூச்சு
நாசமாய் போகட்டும்
உன் நன்றிகள்..!
நரகத்திற்கு செல்லட்டும்
உன் நம்பிக்கை வார்த்தைகள்..!
என்ன பார்க்கிறாய்..?
ஏன் முறைக்கிறாய்..?
விந்தணுவை சிந்திவிட்டு
வீரம் என்றாயே..!
ஏதேனும் பதிலுரைத்தேனா நான்..!
வழக்கம்போல் கவலைகளை
உதறிவிடு,
உன் கடவுளிடம்..
எனக்கு,
சொல்வதில் வெக்கமில்லை
நீ
இட்ட உப்பு
இன்றுதான் செரித்தது..
என்
வலியை என்னிடமிருந்து
பிரிக்கும் வலிமையுண்டா..
உனக்கு..?!
இல்லைதானே..!!
அப்புறமென்ன வேடிக்கை..!
இதுதானே இங்கு வாடிக்கை..!
எச்சமல்ல என் வாழ்க்கை
நீ மென்று சுவைத்திட..
சத்தியத்தின் பெயரால்
சாபமொன்று இடுகிறேன்..
இல்லாது போகட்டும்
நீ
தேடிடும்,
என் கடந்தகாலம்..!