உணர்வுகளின் ஊர்வலம்
பரட்டைத் தலையோடு
கந்தல் துணியோடு
தெருமுனையில் நிற்கும்
பெண்ணே ! ஒருவாய்
தண்ணீர் கூட
கிடைக்காத தீண்டாமையோ?
உன்னையே சீர்குலைத்த
சமுதாயத்திடம் நன்மையை - நீ
எதிர்பார்ப்பது எப்படி ?
உன் உணர்வுகளை
யாரும் புரியவில்லையோ
அன்பு பகிரவில்லையோ ?
தள்ளாத வயதில் - வீதியில்
தள்ளிவிட்ட மகனை
வாழ்த்தி , நடுத்தெருவில்
நிற்கும் தாத்தா!!!
நமக்கொரு மகன்பிறப்பான்
எனதவமிருந்த காலங்கள் - எங்கே ?
ஆசைமகனின் அன்பெங்கே ?
வாழ்கை பயணத்தில்
இப்படி தனிமையில் - வாடிடும்
உன் உணர்வுகளை
யாரும் புரியவில்லையோ
அன்பு பகிரவில்லையோ ?
BY ,
R. Helen Vedanayagi Anita,
Third Year,
Electronics and Communication Department,
Francis Xavier Engineering college,
Vannarpettai,
Tirunelveli - 627003
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
