இளகிய நெஞ்சம் ஹைக்கூ

*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும் பூக்கள்
வர்ணிக்க ஆசையா?
பேசாத வண்ணத்துப் பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும் பாறை.

எழுதியவர் : ந.க.துறைவன் (3-Nov-14, 9:09 am)
பார்வை : 172

சிறந்த கவிதைகள்

மேலே