என் இனிய தங்கைக்கு
என் இனிய இளையவளுக்கு,
பாசம் என்றால் என்ன என்பதை அறியாத
பேருக்கு பாசத்தை ஊட்டி வளர்த்து காலத்திடம்
கொடுத் தால் காலம் தான் என்ன செய்யும்???
நான் உனக்கு அடிக்கடி சண்டை பிடிக்கும்
நண்பன் அவ்வளவு தானே
ஏன் இந்த தயக்கம்?
உனக்கு!!!
உனக்கு தயக்கம் வேண்டியதில்லை.
ஒன்றில் என்னுடன் சண்டை பிடி
இல்லையேல் என்னுடன் கையை கோர்த்துவா!!!
நான் உனக்கு ஆனதெல்லாம் செய்கிறேன்.
உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க பானம்கள்
என்று எல்லாம் வாங்கிக் கொடுத்து அசத்துகின்றேன்.
நினைவு களை அழிக்க நினைக்காதே
அவை நிஜமாக வேறுன்றிவிடும்
பிறகு அவை உன்னைத் துரத்தும்
எனவே, நினைவு களை படர விடாதே
பாதிப்புகளை மனனம் செய்ய லாகாதே
அவை உன்னை வருத்தும்.
இறுதியில் உனக்கு ஒரு வாக்கு மூலம்
அது உனக்கு மட்டுமே தெரிந்தது.