பள்ளியில் முதல் நாள்

கண்களில் நீர் விழ்ச்சி
தரை நனைந்தது!!!!
ஓ! என்று அலரல் சத்தம்
சற்று நேரத்தில் உணர்ந்தேன் வேற்றுலகத்தை....
சிறிது சிறிதாய் நிறைய அறைகள்
அங்கே இரைச்சலும் அமைதியும் கலந்து இருந்தன....
பயந்து சென்றேன் உள்ளே
கண்டேன் மனிதப்பண்னையை
கையில் பிரம்புடன் சிறுகுழந்தைகளை மேய்த்தாள் ஒரு பெண் ஆடுமாடுகளைப்போல்....
அச்சத்துடன் அருகில் சென்றேன்
உன் பெயர் என்ன?? என்று வினாவினாள்
பயத்துடன் விடையும் வந்தது
பிரம்பை எடுத்து ஓங்கி ஒரு அடி மேசையின் மீது
இரைச்சல் இறந்து அமைதி பிறந்தது
"அ,ஆ" என்ற சத்தம் .....
கரும்பலகையின் அருகில் இருந்த பெண்ணின் வாயில்
உணர்ந்தேன்!!! அவர்கள் ஆசிரியை என்று அப்பொதுதான்
ஆம் நான் மாணவனானேன் அன்று முதல்.....