அப்புவும் அம்மாவும் 01
அப்பு என்ற 7 வயது சிறுவன் படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
இனி..
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்?
அம்மா : அது துக்கம் வரும்போது தூங்கும்...
அப்பு : எப்ப தூக்கம் வரும்மா?
அம்மா :அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
அப்பு : கொசுக்கு வீடு எங்கம்மா?
அம்மா :அதுக்கு வீடே இல்லை...
அப்பு : ஏம்மா வீடே இல்லை?
அம்மா :அது ரொம்ப சின்னதா இருக்கா அதான் வீடு இல்ல...
அப்பு : நான் ரொம்ப சின்னபிள்ளைதானே எனக்கு வீடு இருக்கே .....
அம்மா :இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...
அப்பு :அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அம்மா :அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல...
அப்பு :கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது?
அம்மா :கடவுள்...
அப்பு :கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
அம்மா :கடிக்காது...
அப்பு :ஏன்மா கடிக்காது?
அம்மா :கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்பு :அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ?
அம்மா :வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு...
அப்பு :கடவுள் நல்லவராம்மா?
அம்மா :ரொம்ப நல்லவர்....
அப்பு :அப்புறம்ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அம்மா :அது அப்படித்தான் நீ தூங்கு...
அப்பு :கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அம்மா :அதுக்கு பசிக்குது...
அப்பு :கொசு இட்லி சாப்பிடுமா?
அம்மா :அதெல்லாம் பிடிக்காது...
அப்பு :கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
அம்மா :வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
அப்பு :ஒரே ஒரு கேள்வி மம்மி?
அம்மா :கேட்டுத் தொலை
அப்பு :கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அம்மா :அதுக்கு பல்லே இல்லை...
அப்பு :பிறகு எப்படி கடிக்கும்?
அம்மா :அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்டபுடிச்சுக் கொடுத்திடுவேன்...
அப்பு :பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அம்மா :அப்பு வாயை மூடிட்டு தூங்கு...
அப்பு :நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...?
அம்மா : க்கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (மம்மா மறுகையா)