என் கனவுகள் கரையாமல் தடுப்பாயா

உன்னைக் காணாமல்
என் இதயம் அழுகின்றது .

உன்னை பார்க்க
என் கண்கள் அங்கும்
இங்கும் அலைபாய்கின்றது .

என் கனவுகள் எல்லாம்
வெயில் பட்டால் கரையும்
பனிபோல கரைகின்றது .

என் கண்கள் உன்னைக் காணாமல்
தூங்க மறுக்கின்றது.

என் இதயம் உன்னை தவிர
வேறுஒருவரை நினைக்க மறுக்கின்றது .

என் உதடுகள்
என்ன சொல்வது என்று
துடிக்கின்றது உன்னைக் காணமல்.

என் உயிரே
என்னை தேடி எப்போது வருவாயா ?

என் கனவுகள் எல்லாம்
கரையாமல் தடுப்பாயா இல்லை
கரையட்டும் என்று விட்டுச் செல்வாயா .

- புவனா சக்தி

எழுதியவர் : புவனா சக்தி (7-Nov-14, 12:32 pm)
சேர்த்தது : புவனாசக்தி
பார்வை : 133

மேலே