பூங்காற்றிலே

பூங்காற்றிலே ...
உன் சுவாசத்தை
அதில் தேடித்தேடிப் பார்த்தேன்...

உனது புன்னகை என் ராகத்தில்
புலம்பாமல் நீயிருந்தால்
புகை மண்டலம் போட்டி போடுமோ
உன்னோடு.....

சுகந்தக் காற்றை
சுவாசித்த மனிதர்கள் அன்று
இன்றோ..?
அலர்ஜி ஆஸ்துமாவில் ....

விஞ்ஞானத்தின் மாற்றம்
இன்று வரை
போராட்டம்தான் என் வாழ்வில்....

வேற்று நீர் கலப்பில்
ஆற்று நீரும் சாக்கடையாகி
பண்ணிய பாவத்தால்
புண்ணியம் இழந்தன நதிகள்..

பழத்தோல் களெல்லாம்
பாடம் நடத்துகின்றன
சுதந்திரம் வாங்கி விட்டோமென்று ...

பாரதக் குடிமகன் களெல்லாம்
பாரில் தள்ளாடி தள்ளாடி
தலைகீழாய் குழறிக் குழறி....
ஈக்கள் பன்றிகளோடு
பட்டிமன்றம் வழக்காடுமன்றம்
என வாக்கு வாதம்...

காமப் பசியால்
மானம் இழந்துவிட்டன
எந்திரங்களெல்லாம் ....

வானிலையில் மாற்றம்
மானமிழந்துவிட்டோமென்று
அழுகின்றன
அமில மழையில் நனைந்து .....

மானிடனே !
என்னை விற்றது போதும்
2g யும் வேண்டாம்
3 g யும் வேண்டாம்
வேசியாக்க வேண்டாம்
என்னையும்....!

வேண்டும் மானிடனே
சுற்றுபுறத் துய்மை
மனதைப் போலவே
தூசாக எண்ணாதே...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (8-Nov-14, 5:49 am)
பார்வை : 131

மேலே