கானல்நீர்
இதயத் தோண்டலின் எண்ணங்கள் எல்லாம் வடிவமாகிறதா
இருந்தும் இல்லாமல் போகின்றதே
பாலைவனத்தில் தாகம் தீர்க்க நீர்நிலை கண்டு
ஓடி அலைந்து அருகில் சென்றால் கானல்நீராகியது
இருந்தும் இல்லாமல் போகின்றதே
சிலரிடம் செல்வம் இருந்தும் இல்லாமல் போகின்றது
சிந்தனை இருந்தும் பயன் பெறாமல் போகிறது
விதை இருந்தும் முளைக்காமல் செல்கின்றது
வாழ்க்கை இருந்தும் வாழ்வில்லாமல் ஒடுங்குகிறது
நாடே நாடு இல்லாமல் நினைக்கின்றது
வாயே வார்த்தையே இல்லாமல் அடைபடுகிறது
காட்டு வெளியில் எழில் மலர் பூத்து என்ன பயன்
ஆயிரம் கதிரவன் ஆயிரம் கானல்நீர் விண் வெளியில்
எல்லாம் இருந்தும் இல்லாமல் போகின்றதே
இது தான் மாயையா அல்ல
வெறுமையிலும் இனிமை தனிமையிலும் இனிமை
அதுதான் நடுவுநிலைமை கானல்நீரும் உண்மை