நாளைய சமுதாயம்

*
3ஜி வேகத்தில் மனம் போகும்
விரல் நுனியில் உலகம் இருக்கும்
*
வாட்ஸ் அப்புல நட்பு வாழும்
டுவிட்டர்ல லவ் லட்டெர் போகும்
*
ரோபோ இன்னோரு செல்ல குழந்தையாய் இருக்கும்
உண்பதற்கு கார்போ ஹட் ரேட் இருக்காது
*
கற்க வேண்டிய தலைமுறை கற்றுகொடுக்கும்
தவழ வேண்டிய பருவம் கம்பீர நடைபோடும்
*
சுற்றி பார்க்க செவ்வாய் போகும்
தேன் நிலவுக்கு நிலவை மேத்தையாக கேட்க்கும்
*
சிக்னலில் கூட நிற்க நேரம் இருக்காது
சித்திரம் ரசிக்க நேரம் இருக்காது
*
காணிநிலம் கான்கிரிட் வீடாக மாறும்
அடிக்கடி இயற்க்கையும் மாறும்
*
தண்ணீர் தேடியே நாக்கு வரண்டு போகும்
மழையை அண்ணாந்து பார்த்தே பூமிக்கு கழுத்து வலிக்கும்


பன்னீர் செல்வம் ,பிகாம் (சிஎஸ்) இரண்டாம் ஆண்டு ,சாரதா கங்காதரன் கலை மற்றும் கல்லூரி,வேல்ராம்பேட் ,பாண்டிச்சேரி

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (7-Nov-14, 9:22 pm)
பார்வை : 136

மேலே