காத்திருப்பேன்
உன் கரம் பற்றவே
சுயநலமாய் நானும்
என் சுகம் தொலைக்கிறேன் !
உறவுகளெல்லாம்
மாற்றுக்கருத்துகள் பேசியே
மனதை கலைக்க பார்க்கிறார்கள் !
காத்திருப்பேன் என்றே
கர்வம் கொள்கிறேன்
உன் கருவிழிகளில்
நான் மட்டும் கண்ட
என் நம்பிக்கை மீதமிருக்க !