புரட்சிக்கு சில நிமிடங்கள் முன் -- வேலு
விற்பது பொருளாகவே இருக்கட்டும்
நாம் பொருளாக மாறும் வரை
விளைந்தவற்றின் வீரியம் பார்க்கும் அவர்கள்
விதைத்வனின் வயிற்றை பார்ப்பதில்லை
ஊர் உறங்கும் நேரத்தில் ஊரை ஆளும் ஆந்தையே
இருட்டு அறையில் முற்றி நிற்கிறோம் குருட்டு எண்ணத்தில் நாம்
சிறகடிக்கும் எழுத்தில் சிறகொடிந்த பேனா.
புரட்சிக்கு சில நிமிடங்கள் முன் ஒரு சல சலப்பு
சந்தர்ப்பவாதிகள் நாம் இல்லை
சாதுரியம் தாங்கும் ஒரு வேள்வி என்போமே !!!