கொஞ்சும் புறவே உன்னை கொஞ்சிட வேண்டும் 555

என்னவளே...

கருவேலங்கட்டில் ஓடும் சிறு
ஓடையின் நடுவிலே...

ஜோடி வாத்துக்கள்
நீந்த கண்டேன்...

தினம் கரம் கோர்த்து
நாம் நடைபோடும்...

அந்தி பொழுதின்
ஞாபகம்...

பறவையாக
நான் இருந்தால்...

உன் சின்னஞ்சிறு
கைகளில் அடங்கி இருப்பேன்...

இரவினில் வானில்
உலா வரும்...

நட்சத்திரமாய்
நான் இருந்தால்...

தினம் உன்னை
தேடி வருவேன்...

நீ ரசிப்பதற்காகவே...

நான் தனிமையை
உணரும்போதேல்லாம்...

துணைக்கு வருவது
உன் நினைவுகள்தான்...

என் துணைக்கு
வருவதெல்லாம்...

இப்போது வேண்டுமடி
உன் தரிசனம் எனக்கு...

ஒரு பறவையாக என்
கைகளில் ஏந்தி முத்தமிட...

கொஞ்சும் புறாவே...

என்னை கொத்தி கொத்தி
கொஞ்ச நீ எப்போது வருவாய்...

மனைவி என்னும்
பறவையாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Nov-14, 8:54 pm)
பார்வை : 531

மேலே