கல்வி முறையில் மாற்றம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
கல்வி முறையில் மாற்றம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
-----------------------------------------------------------------------------------------
பணத்தைப் பெருமையாய் திணித்து
படிக்கவே இடம் கேட்டும்
இழிவு ஒழிந்து
அரசுப் பள்ளியின் தரம் உயர
அற்புத திட்டம் அதிகம் வேண்டும்
தனியார் பள்ளியின் அதிகாரம் குறைந்து
அரசின்கீழ் நிற்க
சேவையே உணர்வாக
இளைய சமூகத்தை உயர்த்த துடிக்கும்
ஆசான் நிறைந்த ஆலயம் வேண்டும்
மின்னல் கீற்றாய் ஒளிரும் திறனை
மனனம் ஒன்றால்
மறைத்து வைக்கும்
அறியாமை வேரோடு அழியட்டும்
மாணவர் மனதில்
சிதைந்த அரசுப் பள்ளிகள்
விடுதி வசதியோடு
புதுப்பொழிவை பெற்று
சரித்திர சாதனைப் பெறட்டும்
மாநில அளவில்
திணிக்கும் கல்வி தீயில் எரித்து
விரும்பும் துறையே
விழியில் நுழைந்து
விண்ணை விரட்டும் உவகைப் பெறட்டும்
உலக அளவில்
கற்றலின் நோக்கம் அறிய வைத்து
கற்றலின் பலனை
செயலில் வைத்து
கனவினை கல்வியில் தைப்போம்
தாய்மொழி உணர்வில்
ஒழுக்க முறையை ஒழுங்காய் சொல்லி
சட்டத்தின் விதியை
சரியாய் சொல்லி
அடுத்த சமூகத்தை கையில் தருவோம்
கல்வியின் வளர்ச்சியில்
செய்முறைப் போட்டியை புதிதாய் வளர்த்து
உற்று நோக்கும்
உணர்வை கொடுத்து
தேடலை மட்டுமே பாடமாய் வைப்போம்
அறிவியல் முறையில்
--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு