முட்டாள்கள்

முட்டாள் தேனீக்களே
அவள் இதழ்கள் இங்கிருக்க
எதை தேடி செல்கிறாய் மலர்களுக்குள்......

முட்டாள் அறிவியலாளர்களே
வெண்ணிலா இங்கிருக்க
எதை தேடி செல்கிறீர்கள் விண்வெளிக்கு......

முட்டாள் மீனவனே
முத்து இங்கிருக்க
எதை தேட முங்குகிறாய் கடலுக்குள்......

முட்டாள் கவிங்கனே
கவிதை இங்கிருக்க
எதை கிறுக்குகிறாய் தாள்களில்.....

முட்டாள் சிற்பியே
சிலை இங்கிருக்க
எதை செதுக்குகிறாய் கற்களில்.....

முட்டாள் ஓவியனே
ஓவியம் இங்கிருக்க
எதை வரைந்து கொண்டிருக்கிறாய் சுவற்றில்.....

பெண்ணே...
நானும் முட்டாள் ஆனேன்
பார்க்கும் யாவும் நீயாய் இருப்பதினால்.....

எழுதியவர் : பிரதீப் (12-Nov-14, 2:26 pm)
Tanglish : MUTTALKAL
பார்வை : 154

மேலே