இல்லம்

வசிக்கும் வீடில்லை
வருமானம் ஈட்டத் தான் இவ்வீடு
கைத்தொழிலில்
வயிறு நிறைகிறது
வீடு நிறைய ....
குச்சிகள் சேர்ந்து கூண்டு
குருவிகள் சேர்ந்தால் கூடு
கல்லும் மண்ணும் கட்டிடம்
இதயங்கள் இணைந்தாலே இல்லம்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (12-Nov-14, 3:06 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : illam
பார்வை : 67

மேலே