உன் புன்னகையின் பொருள் என்ன
![](https://eluthu.com/images/loading.gif)
உத்திக்கும் சூரியனின்
ஒளியைவாங்கி - நிலவு
பிரகாசித்தது ...
உன் இதழ்களின்
நிறத்தை வாங்கி
ரோஜாக்கள் பூத்தன . ..
அதனைக் காதல்
பூவென்று கூறுவதால் -உன்னிடம்
அதிலொன்றைப் பறித்துக்
கொண்டுவந்து கொடுத்தேன்.
பெற்றுக்கொண்ட நீ
புன்னகைத்தாய்...
என் அறியாமையை
எண்ணிப் புன்னகைத்தாயோ!
உன்
புன்னகையின்
பொருள் என்ன?