காதலுக்கு ஒரு கூரை
சூரியனின் செந்தழல் நெருங்காமல்
பகலிலும் நாம் காதல்ச்செய்ய வேண்டுமென்று
இந்திய தீபகற்ப நீரை மேலெழச் செய்து
இமயம்வரை தல்லிக் கூரை மேய்கிறேன்
அன்பே ......!!
இரவென்று நீ நம்ப வேண்டும் என்பதற்காக
விண்மீன்களுடன் சந்திரனையும் கூரைக்குள் ஒளிப்பேன்
அன்பே ......!!