தூது செல் தென்றலே -கயல்விழி

தடைகளை உடைத்திட பலம் தந்த
என்னவனின்
துயர்தனை துடைத்திட
வழியில்லை

மலர்ந்த மன்னன் முகம்
வாடுகையில்
மடியில் தாங்கிட
அருகில் இல்லை

கொஞ்சும் அவன் குரல்
குளறுகையில்
நெஞ்சில் அணைத்திட
முடியவில்லை

நடந்தவை அனைத்தும்
நன்மைக்கே
உதடுகள் உச்சரிக்கும்
நேரமதில் உள்ளம் மட்டும்
அழுகிறது ..

உறவை இழந்த வலி தனை
உள்ளுக்குள் பூட்டி அழுவானோ .?
தேற்றிட வேண்டும் என்னவனை
தேடி செல் தென்றல் காற்றே
தூது சொல் செல்லத்திற்கு
துயர்கொள்ள வேண்டாம்
என்று...

எழுதியவர் : கயல்விழி (15-Nov-14, 7:53 pm)
பார்வை : 1844

மேலே