காதலே கவி எழுத பாட சாலை

பூஞ்சோலை நடுவே அருவி என்பது அவள்
புன்னகைக்கையில் நான் ரசித்த வெண்பற்கள்
பூரித்த வண்ணங்கள் - கன்னங்கள் - காதல்
புதுமையில் எப்போதும் என் எண்ணங்கள்....!!

காதலே கவி எழுதப் பாட சாலை - அதில்
கற்பவருக்கு காலமெலாம் இன்பநிலை
காயத்தில் காதலை வைத்து விட்டால்
காலமெலாம் அதுவே துன்ப நிலை.....!!

மனதினை காதலிப்போம் மானுடராய் மாறுவோம்
மண் திங்கும் மேனியில் மையலைக் கொல்லுவோம்
மலரட்டும் காதல் மேதினி எங்கிலும் - மலரென
மலரட்டும் காதல் மேதினி எங்கிலும்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-14, 11:50 pm)
பார்வை : 72

மேலே