அன்பென்னும் மழை- 7 DEVI

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

(முன்கதை சுருக்கம்:சிறு வயதில் பார்த்து பேசி பழகிய, ஒன்றாக விளையாடிய அத்தை மகள் உமாவை போலவே இவள் இருக்கிறாளே. யார் இவள். அவளிடம் அவள் பெற்ற்றோர் பற்றி கேட்காமல் விட்டுவிட்டேனே என்று யோசனையாய் அமர்ந்திருந்தாள்.)

அந்த மாதம் சம்பளம் தரும் முன் அனைவரையும் அழைத்து மீட்டிங் ஏற்பாடு செய்தான் வருண். வீகென்ட் சண்டே தவிர மற்ற நாட்களில் லீவு எடுக்காமல் வருபவர்களுக்கு ஊக்க தொகையாக ஒரு நாள் சம்பளம் கொடுக்கபோவதாகவும், சேல்சில் அதிகமாக சேல்ஸ் செய்பவர்களுக்கு இன்செண்டிவும், அதிகமாகவும், வாகனம் சர்வீஸ் பிரிவில் அதிகமாகவும் கஸ்டமர் விரும்பும் விதத்தில் செர்விசீஸ் செய்பவர்களுக்கு இன்செண்டிவும் வழங்கப்படும் என்று அறிவித்தான்.

அந்த வாரம் ஞாயிறன்று ஊழியர்களை கொடைக்காணல் அழைத்து போவதாக கூறவும் அங்கு ஒரே மகிழ்ச்சி கூச்சல்.

மீட்டிங் முடித்து ரூமுக்குள் சென்றவன் வர்ஷிதாவை இண்டர்காமில் அழைத்தான். வர்ஷிதா ஸ்டாக் ஆர்டர் போடணும் பைல்ஸ் எடுத்திட்டு ரூமுக்கு வா என்றான்.
வருணுக்கு தேவைப்பட்ட பைல்கையும் தகவல்களையும் எடுத்து கொடுத்தாள். வேலை இரவு 8 மணி வரை நீண்டது.

அச்சோ வர்ஷிதா உனக்கு நேரமாகி விட்டதே. சரி வீட்டுக்கு போகையில் உன்னை ட்ராப் உன் வீட்டில் ட்ராப் பண்ணிடறேன் வா என்றான்.

வேண்டாம் உங்களுக்கு ஏன் வீண் சிரமம் . நான் போய்கறேன் சார் என்றாள். எனக்கு என்ன சிரமம். நானா உன்னை சுமக்க போகிறேன். கார்தானே சுமக்க போகிறது.

மேலும் வீடு போவதற்குள் நானும் உன்னை தின்று விடமாட்டேன் தைரியமாக வரலாம் என்றளைதான் . வீண் விவாதம் இன்னும் நேரத்தை அதிகபடுத்தும். அம்மா வேறு இன்னும் காணவில்லை என்று பயப்படுவார்கள். ஆபத்துக்கு பாவமில்லை இவனுடனே செல்லலாம். நாம் தைரியமாக இருக்கும் போது இவன் நம்மை என்ன செய்துவிடமுடியும். சரி சார் கிளம்பலாம் என்றாள்.

காரில் போகும் போது கேட்டான். வர்ஷிதா நீ கொடைக்காணல் வருவையல்லவா என்றான்.
இல்லை சார், அம்மா சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன்.

(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (16-Nov-14, 12:11 pm)
பார்வை : 183

மேலே