காத்திருப்போம்
ஒப்பனைக் கதவில்
தீண்டப் படா
பெண்மைப் பூக்களில்
விடியா முதுமை காம்பில்....
வரன் வண்டைத் தேடும்
தாய்க் கொடி எதிர்பார்ப்பு
முள் வேலியிலும்
படர முடியாமல்....
இனிமைத் தென்றலைத் தேடியே
களைத்து ஓய்கிறது
வரதட்சணைக் களையெடுப்பில்.....
வேரை விட்டு வரவும் முடியாமல்
நாக செவ்வாய் புத்திர தோஷம் பார்த்தே
தாய் செடியின் கண்ணீர் புலம்பல்....
வரதட்சணைக் காம்பை முறிப்பதா?
முதிர்ந்த காம்பை ஓடிப்பதா?
முதுமை இருளை சுடுவதா?
என்றுதான் நமக்கு விடியல்
அதுவரை காத்திருப்போம்
கவிதைக் கண்ணீரில்
நனைந்திருப்போம்
விடியும் வரை.....