சமர்ப்பணம் முத்தப்போராளிகளுக்கு

முத்தப்போரட்டம்...

முதியோர் இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...
முதியோர் இல்லம் பெருக இந்த போராட்டம்...
முத்தம் பெற பேர்தான் நீ இன்று எதிர்த்து விட்டால்...
முதியோர் இல்லம் நாளை பெற்றவன் உனக்கு !!!

அநாதை இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...
அநாதை இல்லம் பெருக இந்த போராட்டம்...
அன்பு என்று அரவணைத்து கட்டிலில் முத்தமிட்டான்...
அநாதை ஒன்று உருவெடுக்க உன்னில் வித்திடுவான்....

அன்பு இல்லம் மலரவல்ல போராட்டம்....
அன்பு இல்லம் வாடிடவே இந்த போராட்டம்...
அன்னையவள் இட்ட அன்னம் சேமிக்கும் முன்னே...
அலறிவிதை அன்னம் அவள் உயிர்பறிக்கும் உன் முன்னே...

தீண்டாமை ஒழிக்க இல்லை இப்போராட்டம்...
தீண்டல் தேடி அலைந்துதானே இப்போராட்டம்...
தீண்டியவன் வீடு செல்வான் தீர்த்துவிட்டு காமத்தை...
தீக்கிரைக்கு பலி கொடுப்பான் உன்வீ ட்டவரின் தேகத்தை....

உணவற்றனின் போற்றட்டம் அர்த்தம் அற்று போனதுவே
உடையற்றவன் மானமிங்கு அர்த்தம் அற்று போனதுவே
உணரிச்சிகளும் அலைபாய பண்பாடு அழிந்து போனதுவே
உள்ளங்கள் குமுறுதிங்கே தமிழன் மானம் போனதுவே

ஏன் இந்த அவலநிலை? பெற்றோரின் கவனம் எங்கே?
ஏளனமாய் போனதுவேன்? ஏமாளி ஆனதுவேன்?
சிந்திப்போம் சமூகத்தை! கண்டிடுவோம் மற்றவை...
இனி வேண்டாம் சீர்கேடு! திரும்பிவிடு என் தோழமையே!!!

எழுதியவர் : என்றும் அன்புடன் -ஸ்ரீ- (17-Nov-14, 1:07 pm)
பார்வை : 181

மேலே