உறங்கும் மிருகம்
நரைத்த முடியுடன் நாற்பதுகளின் இறுதியில் நான்
பேருந்தில் ஏறினாள் நங்கை நறுமணத்துடன் ....
உரசினாள் ..என்னுள் மிருகம் விழித்தது ....
அப்பா கொஞ்சம் தள்ளிநில்லுங்க என்றாள் ..
அதிர்ந்து விலகினேன் ..தன்னிச்சையாய்
என் மகள் முகம் நினைவில் வர ...