வாய் மொழிச் சொற்கள் சில

அன்புள்ள மாந்தர் மனிதருள் தெய்வம்.
தலைவனுக்கு ஊழியனாகவும் இருக்கத் தெரிய வேண்டும்.
மனக்கவலை பலக்குறைவு.
மகத்தான பணியை தொடங்குகிறது அறிவு உழைப்பு அதனை முடிக்கிறது.
ஆற்றை பார்த்தால் அறிவு இறங்கி நீந்தினால் அனுபவம்.
அளவிற்கு அதிக மான ஓய்வு வேதனையைத் தரும்.
விரொதமற்ற மனிதன் எதை செய்தாலும் அது தளைத் தோங்கும்.
உயர்ந்த கொள்கைக்காக இறப்பை எய்துகிறவன் எப்போதும் தோல்வி அடைவதில்லை.
திறமையும் அவசியமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் வாழ்கின்றன.
பொதுவாக தலை சிறந்த அறிவு என்ன வென்றால் உறுதியாகத் தீர்மானித்தலெ.
உழைப்பால் களைப்பு அடைபவர்களே உண்மையான இன்பம் காண்கின்றார்கள்.
முட்டாளின் அகராதியில் தான் இயலாது என்ற சொல்லைக் காணமுடியும்.
உயர்ந்தவர்களின் எண்ணம் சொல், செயல் எல்லாமே சிறந்து விளங்கும்.
முயற்சி செய்யும் வரையில் எவருக்கும் தம் திறமை தெரிவதில்லை.
விவாதம் செய்வதை விட இசைவு காரியத்தை நிறைவேற்றி விடுகிறது.
வாழ்க்கை கூட முக்கியம் அல்ல அதில் நீங்கள் காட்டும் மன உறுதி தான் மிகவும் முக்கியம்.

எழுதியவர் : புரந்தர (17-Nov-14, 6:11 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 123

மேலே