அனுபவம்

ஒவ்வொரு அனுபவமும்
ஒரு ஆசான் !

காசு கொடுத்து
வாங்க முடியாத ஒரு சொத்து !

பின் நோக்கி தள்ளினாலும்
முன் நோக்கி செயல் படுத்துபவன் !

பல்கலை கழகத்தில்
பெற முடியாத ஒரு பட்டம் !

அனுபவத்தை உருவாக்க முடியாது !
அனுபவத்தை அனுபவித்து உணர வேண்டும் !

வாழ்க்கையில் நடக்கும்
நிகழ்ச்சிகள் அல்ல அனுபவம் !
நிகழ்ச்சிகளை நாம்
கையாளும் விதம் !

சிக்கல்களின்
சிக்குகளை
சீராய் அவிழ்க்க வைப்பவன் !

கடினமான கடந்த
காலத்தை கடக்க வைத்து
எழுச்சியான
எதிர் காலத்தை கொடுப்பவன் !

முடியாது என கூறும் ஆணவம் !
இக்கட்டானது என கூறும் இதயம்!
முடிவற்றது என கூறும் அறிவு !
முயன்றால் முடியும் என கூறும் அனுபவம் !

கடந்த காலம் ஒரு அனுபவம் !
நிகழ் காலம் ஒரு ஆய்வு !
எதிர் காலம் ஒரு எதிர்பார்ப்பு !

ஆய்வில் அனுபவத்தை கையாண்டு
எதிர் கால எதிர் பார்ப்புகளை நிறைவேற்றுவோம் !

தவறுகளை
தவறாமல் செய்து
தண்டனையை
அனுபவம் வாயிலாய்
தவறமால் ஏற்கின்றோம் !

அனுபவத்தை
ஆசானாய் ஏற்று
அம்சமான வாழ்க்கையை
ஆனந்தமாய் வாழ்வோம் !

=கிருபா கணேஷ் ==
**************************************

எழுதியவர் : kirupaganesh (17-Nov-14, 10:46 pm)
Tanglish : anupavam
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே