மழை நாளில்
மழை பெய்து கொண்டிருக்கிறது..
இன்னும்..
சிறுமி கைகளில்
மழையைப்
வாங்கிக் கொண்டிருக்கிறாள்..
குடிசைக்கு உள்ளேயே..
..அடுப்பில் ..
பூனை
உறங்கிக்
கொண்டிருக்கிறது!
இருவரும் ..
பசியை
மறந்தபடி
நம்பிக்கையோடு !
..
பாத்திரம் கழுவிக் கொடுத்து விட்டு
அம்மா வந்து கொண்டிருக்கிறாள்..
வீட்டுக்கு!