கவிதை திருடனுக்கு -கயல்விழி

திருட்டு நாயே என்றால்
நாய் என்னை கடித்திடும்
உன்னோடு ஒப்பிட்டதால்

-------தின்னும் பன்றி என்றால் உன்னை
பன்றிகளும் என்னை முறைத்திடும்
உன்னைப்போல் இழிவான நிலையில்
அது இல்லை என்று

அறிவிழந்த மூடனே
எங்கள் உடமைகளை
திருடி இருந்தால் மன்னித்திருப்போம் மனிதன் என

எங்கள் உணர்வுகளை அல்லவா
திருடினாய் மானங்கெட்டவனே
மன்னிப்பு ஏதடா உனக்கு ?

திருட்டை இன்றோடு
விட்டுவிடு
இல்லை இதையும்
திருடி விற்றுவிடு

தெளிவாய் சொல்கின்றோம்
கேட்டுகொள்
உன் திருட்டு இன்றோடு முடியாவிட்டால் நாளை
தீர்ப்பு எம் கையில்
தெரிந்துகொள் ....!!

"கடுப்பில் கயல்"

எழுதியவர் : கயல்விழி (19-Nov-14, 1:49 pm)
பார்வை : 487

மேலே