திருட்டு கவிதை

இரவும் பகலும் உணவு தூக்கம் மறந்து
எழுதினேன் கவிதைகனை.
அதை நீ திருடி உன் பெயர் போட்டு
பதித்தாய் வேறு ஒரு இணைப்பில் .

என்றும் இல்லாத ஆனந்தம்
இன்று எனக்கு .
நானும் கவிஞன் ஆகிவிட்டேன் என்று.
ஏன் என்றால்
உன்னை திருட வைக்கும்அளவுக்கு
என் படைப்பு உன்னை ஈர்த்து இருக்கிறது அல்லவா.

-புவனா சக்தி

எழுதியவர் : புவனா சக்தி (19-Nov-14, 3:31 pm)
Tanglish : thiruttu kavithai
பார்வை : 572

மேலே