மௌன மொழி

பிறந்த நாள் முதலாய்
பூமி மௌன மொழி
பேசுகிறது வானிடம்

கடலின் மௌனம்
புயலை தோற்றும்
புயலின் மௌனமோ
தென்றலாய் மாறும்

காதலில் மௌமம்
கண்ணீர் பேசும்
கடவுளின் மௌனம்
பக்தியை தூண்டும்

தோல்வியில் துவளாத -மௌனம்
தடைகளை தாண்டும்
வெற்றியில் மௌனம்
புகளை தூண்டும்

உடலின் மௌனம்
தவம் ஆகும்
உயிரின் மௌனம்
இறப்பாய் போகும்

மனங்களே மௌன மொழி
கற்போம் கொஞ்சம் --மௌனமாய்

எழுதியவர் : இணுவை லெனின் (19-Nov-14, 6:32 pm)
Tanglish : mounam
பார்வை : 61

மேலே