மலர்கள்
மண்ணின் புன்னகை
மரங்கள்
மரங்களின் புன்னகை
மலர்கள்
அழகு என்பதன்
மொழி பெயர்ப்பு மலர்கள்
உறவு பிரிவு என
உணர்சிகளின் வெளிப்பாடு
மலர்களே
தலை கொய்தவன்
கைகளிலும் சிரிக்கும்
உயிர் ஒழுகும்
ஓவியங்கள் மலர்கள்
வாழும் வரை புன்னகை
சாகும்வரை சந்தோசம்
என வாழ்கையை
வரவிலக்கணம் மலர்கள்
மலர்களின் ஒவொரு
மலர்சியில் மகிழ்சியை
மனிதம் உணர்ந்தால்
மனங்கள் மலர்களாகும்