தமிழ் படித்ததால்
வேலை இல்லையே
வேல் ஐயா
இனி காக்க எங்களை
யார் ஐயா
சங்க தமிழர்
அகம் புறம் படித்தோம்
சரித்திரத்தின்
உணர்வையும் படித்தோம்
சோழ நாட்டின்
சோத்து வளம் படித்தோம்
இன்று சேத்து ரோட்டில்
வேலை தேடி
களபிலர் போல
களைத்து போனோம்
18 கீழ்க்கணக்கு வயதில்
கல்வி தேடியும்
18 மேல்வயத்தில்
வேலை தேடியும்
விழித்து கிடக்கிறது
எம் வாழ்வு
தமிழ் படித்து
தமிழ் நாட்டில் குற்றமா ?
தமிழ் கடவுளே