கவிதை திருட்டு o0o ஒப்பாரி
சிரிப்பும் கும்மாளமுமா
அண்ணன்தம்பி பட்டாளமா
அய்யா அம்மாவுந்தான்
அக்கா தங்கச்சியுந்தான்
கருத்தான கவி படச்சி
தளத்துல கெடத்தயில
தறுதல பய எவனோ
களவாண்டு போனதெல்லாம்
ஆருகிட்ட சொல்லி அழ...
தேற வழி சொல்லுங்களேன்.....
ஆங்....... ஹக்..ஹக்..ஹக்..ஹக்....ஹக்....
சர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
ஒலகத்து மொத்த சனம்
ஒண்ணாத்தானே சேர்ந்து இங்க
பாச பந்தம் பேசி பேசி
வாழ்ந்த பறவ கூட்டம்
நேரங்காலம் பாக்காம
தமிழைத்தான் தோரணமா
கட்டி அழகு பாத்ததெல்லாம்
காணாம போகுதைய்யா
வயிரெறிஞ்சி நிக்குறமே
வழி ஒன்னுந்தெரியலையெ.....
ஆங்....... ஹக்..ஹக்..ஹக்..ஹக்....ஹக்....
சர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
கணக்கில்லா அப்பனுக்கு
பொறந்திட்ட களவாணிய
கண்டாக்கா சொலுங்களேன்
கண்டந்துண்டம் செஞ்சிடலாம்
மொட்ட போட்டு மூதேவிக்கு
கரும்புள்ளி செம்புள்ளிதான்
குத்திடலாம் .. குத்திடலாம்..
கழுத மேல ஏத்திடலாம்...
நாதாரிய காறி துப்பி
நகர் வலம் வெச்சிடலாம்...
ஆங்....... ஹக்..ஹக்..ஹக்..ஹக்....ஹக்....
சர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
அறிவு திருட்டு போகுதய்யா
அச்சம் வந்து மோதுதைய்யா
மனசு தாங்கலையே
நல்ல வழி சொல்லுங்கைய்யா..
நாசமா போனவன
நண்டு கொட்ட நரி கொதற
திருட வரும் நேரத்தில
தேகத்ததான் கொளவி கொட்ட
ஆங்....... ஹக்..ஹக்..ஹக்..ஹக்....ஹக்....
சர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....