சுதந்திர இந்தியாவின் நிரந்தர அடிமைகளா விவசாயிகள்

சுதந்திர இந்தியாவின் நிரந்தர அடிமைகளா விவசாயிகள்?
தரணி வாழ் தமிழன் போற்றும் பொங்கல் நந்நாளில்
இனிக்கும் அடிக்கரும்பும், அவித்த பனை கிழங்கும்
அமுதொத்த சர்க்கரை பொங்கலையும் சுவைக்க
பாசமாய் அண்ணன், அக்கா,அத்தை,மாமா, நண்பர்கள்
என என் சுற்றத்தினர் அனைவரும் என் முற்றத்தில்,
நேசமாய் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள!
நலன் விசாரிப்பில், உபசரிப்பில், இருந்த என் கண்ணில்,
குத்தீட்டியாய் இறங்கி, இதயத்தை பிசைந்தது அந்த செய்தி!
“கருகும் பயிரை காக்க இயலாத திருச்சி விவசாயி, உயிரை மாய்த்துக்கொண்டார்”
கொண்டாட்டங்கள் மறந்து , எழுந்தன ஓராயிரம் கேள்விகள், என் அடி மனதில்….
சுதந்திர இந்தியாவின் நிரந்தர அடிமைகளா விவசாயிகள்?
ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கால், நிரந்தர வலியில்,
சாவின் விளிம்பில், வறுமையின் பிடியில்,தமிழக விவசாயிகள் !!
தனது தசைநார் பிழிந்து, மண்ணை உழுது, நெல்மணிகளை விழைவித்த
ஏழை விவசாயிக்கு இறுதியில் மிஞ்சியது
வாங்கிய கடனின் வட்டியும்,அது போட்ட குட்டியும்!!
முப்போகமும் விளைந்த நஞ்சை நிலங்களெல்லாம் இன்று தரிசானதால்,
குதிரைக்கொம்பானது ஒருசாண்வயிற்று பிழைப்பே தமிழக விவசாயிகளுக்கு!!
பெருச்சாளிகளாய், ரத்த காட்டேரிகளாய் இடைபுகும் இடைத்தரகர்கள்,
விளைபொருட்களின் விலை குறைத்து, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்!
விவசாய கடன் தள்ளுபடி என்ற வலை பின்னி,இலவசங்களை வாரி வீசும்,
அரசியல்வாதியின் கானல் நீர் பேச்சில் ஏமாந்து வாக்களிக்கிறான் ஏழை விவசாயி
காவிரி நீர் கூட அதிகம் பயன்படுவது அரசியலுக்குத்தான், விவசாயத்திற்குஅல்ல!!
இந்த வெள்ளந்தி மனிதர்களின்,ஊரக பொருளாதார மேதைகளின் வாழ்வு செழிக்கவும் ,
விவசாயத்தின் மாண்பு போற்றிடவும் அவர் வழி அனைவருமே உழைத்திடவும்,
தித்திக்கும் அந்த பொங்கல் திருநாளில் சூளுரைத்து விடைபெற்றோம்.!!
நெல்லை ஜெயராஜ்

எழுதியவர் : (20-Nov-14, 11:35 am)
சேர்த்தது : Christopher Jeyaraj
பார்வை : 75

மேலே