நீலக்குயில் தேசம்1---ப்ரியா

நீலக்குயில் தேசம்---ப்ரியா

கயல்விழி அடிக்கடி சென்று வரும் அந்த தேசம்மிகவும் அழகாய் ஒரு குட்டித்தீவாகவே இருந்தது தினமும் அந்த இடத்திற்கு அவள் யாருக்கும் தெரியாமல் சென்று வருவது வழக்கமாக இருந்தது......

இன்றும் அப்படியே தான் அவள் தனது அந்த அழகிய தேசத்தை நோக்கி இரவில் பயணமானாள் யாரோ முன்னின்று அவளை நடத்தி செல்வது போன்ற உணர்வு அவளுக்குள்.......அவள் பயணிக்கும் பாதைகள் இருளாய் இருந்தாலும் போகப்போக அவள் செல்லும் பாதையில் மட்டும் வெளிச்சம் பரவியது என்ன நடக்கிறது என்று அவளால் யூகிக்க முடியாத நிலை இருந்தும் அந்த பாதை வழியே பயணமானாள்........

அந்த வழியில் இருபுறமும் அழகிய சந்தனமரங்கள் காற்றில் அழகாய் மணம் பரப்பிக்கொண்டிருந்தது.

வானத்திலிருக்கும் எண்ணற்ற நட்சத்திரங்களை போல எண்ணற்ற மின்மினிப்பூச்சிகள் அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தன., தென்றலது தாலாட்டுப்போன்று இன்னிசைப்பாட அதன் ராகத்திற்கேற்ப தலையாட்டி புன்னகைத்துக்கொண்டிருந்தன பூக்கள், சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் வெளிச்சம் பரவியது அப்பொழுதுதான் பார்த்தாள் அது ஒரு அழகிய நந்தவனம்.......!!!

நம்மிடத்தில் இப்படியொரு அழகான இடமா? என் வியந்தாள் கயல்!!!!! நிறைய மரங்களும் அழகிய பூக்களுமாக காட்சியளித்தது மூலிகைகைச்செடிகள் ஒருவித நறுமணத்தை ஏற்படுத்தியது அந்த அழகில் கிட்டத்தட்ட மயங்கியே போனாள் கயல்....!

இந்த இடத்திற்கும் முடிவில்லைப்போலும் என் நினைத்துக்கொண்டே அப்பாதையினூடே நடந்தாள் வெகுதூரம் பயணமானாள் அதன் பிறகு சிறிது தொலைவு சென்றதும் அங்கு யாரோ வெள்ளியை உருக்கி ஊற்றுவதைப்போல் உருகி ஓடிக்கொண்டிருந்தது அந்த அழகிய நீரோடை அதனருகில் அமர்ந்து கொண்டிருந்து பறவைகள் உரையாடிக்கொண்டிருந்தன "சாமந்திப்பூவின் வாசம் வருகிறதே நம் ராணி வந்துட்டாங்களோ? என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததை இவளால் கேட்க முடிந்தது........ஆம் என்பது போல் சில பறவைகள் இவளை உற்றுநோக்க.....நம் ராஜா எங்கே என்று கேட்டனர் ?அதோ அங்கே நம்மினத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பறவை காட்டிய திசையை நோக்கினாள் கயல்.....!

சிறிது தொலைவிற்கு அப்பால் ஒருவன் அந்த திசையில் திரும்பி நின்று சைகையால் ஏதோ செய்துகொண்டிருந்தான் அந்த பறவைகள் கூட்டத்தில் இதை கவனித்தவள் அவன் அருகில் செல்ல முயற்சித்தாள்.........அவனுக்கு முன்பு ஒரு பெரிய அருவியும் கொட்டிக்கொண்டிருந்தது அதனால் அவனை இவள் அழைத்துக்கொண்டே சென்றும் அவன் காதில் இவள் குரல் விழவில்லை.......

அதன் பிறகு பொறுமையாய் அவள் அவனுக்கு பக்கத்தில் சென்று அவனை நெருங்கும் சமயம் பலத்த காற்று அடித்து வீச வேகமாய் வந்து அவள் மேல் விழுந்தன மழைத்துளிகள், அந்த மழைத்துளிகள் முழுவதுமாய் அவளை நனைக்க கண்மூடி.....கண்திறந்து நிமிர்ந்து பார்த்தாள் அதற்குள் அங்கு மயான அமைதி அவன் உருவமும் மறைந்திருந்தது ........!

"ஏய் மணி 7ஆச்சி இன்னும் என்னடி தூக்கம் வேண்டி இருக்குது முதல் நாள் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ற பொறுப்பு இருக்குதா எந்திரிடி" என்ற அம்மாவின் குரல் கேட்க திடுக்கிட்டு எழுந்தாள்....?அப்பொழுது தான் கவனித்தாள் அதை அவளை எழுப்புவதற்காக அம்மா அவள் மேல் தெளித்த தண்ணீர் துளிகளை....... ஐயோ என்ன இது கனவா? காட்டில் மழையில் நனைந்த உணர்வு இதுதானா அம்ம்ம்ம்மா...........என்று கத்தினாள்.

என்னடி இவ்ளோ நேரம் தூக்கம் அதான் முகத்தில் தண்ணி அடித்தேன் என்றாள்....ச்சே இன்னிக்கும் கனவுல வந்த அவனை பார்க்க முடிலையே சரியான நேரத்துல கரெக்டா வந்து கெடுத்துட்டீங்க என்று அம்மாவை செல்லமாய் கோவித்துக்கொண்டு குளியலறையை நோக்கி ஓடினாள் கயல்.....!


(கயல் யார் அவளது முழுவிபரங்கள் என்னவென்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.....)



தொடரும்....!

எழுதியவர் : ப்ரியா (20-Nov-14, 3:58 pm)
பார்வை : 532

மேலே