அன்பென்னும் மழை-8 தேவி

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.


(முன்கதை சுருக்கம் : அம்மா கொடைக்காணல் போக சம்மதிக்க மாட்டார்கள் என்றாள் வர்ஷிதா)

சரி நான் பேசி பார்கிரேனே என்றான்.வேண்டாம் என்று மறுத்தாள். நான் பேசி உன் அம்மாவை எப்படி சம்மதிக்க வைக்கிறேன் பார் என்றான்.
பின்னாடி அமர்ந்திருந்தவள் எதேயச்சயாக நிமிர கண்ணாடி வழியே அவன் அவளையே ரசித்துகொண்டிருந்தான். ஒரு நொடி அவன் கண்களை சந்தித்தவளுக்கு கண்களின் வழியே ஊடுருவி
இதயத்தை துளைப்பதை போல் உணர்ந்தாள்.

சட்டென முகத்தை திருப்பி வெளியே பார்க்கலானாள். அவர் என்னை தான் பார்த்தாரா , இல்லை ஆசை கொண்ட மனதின் கற்பனையா?

திடுக்கிட்டு போனாள். என்ன இது இப்படி கற்பனை குதிரை கட்டவிழ்ந்து பறக்கிறது. தலையை உலுக்கி நினைவுக்கு வந்தாள்.

அதற்குள் வீடு வந்து விட்டது. வர்ஷிதாவின் தாய் வாசலிலேயே காத்து கொண்டிருந்தார். தேங் யு சார்.நான் வருகிறேன் என்றாள்.

என்ன வர்ஷிதா வீடு வரை வந்திருக்கிறேன். உள்ளே வான்னு கூப்பிடமாடியா? இப்படி வாசலோடேயே அனுப்ப பாக்கறியே என்றான்.

இல்லை சார் அது வந்து , என்பதற்குள் வர்ஷிதாவின் தாய் , கண்ணு சார் யாரும்மா என்று கேற்க, அம்மா அவர் என்னோட பாஸ்மா என்றாள்.

வாங்க சார், உள்ள வாங்க. உங்களுக்கு சாப்பிட பழ ரசம், அல்லது காபி எடுத்து வரட்டுமா என்று கேட்க , ஆண்ட்டி முதலில் என்னை சார் என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள்.

வேறு எப்படி தம்பி கூப்பிடுவது.
அது தான் இப்போது கூப்பிட்டீர்களே. தம்பி என்று அப்படியே அழையுங்கள் ஆண்ட்டி என்றான் புன்னகையோடு வர்ஷிதாவை ஓரக்கண்னால் பார்த்தபடி.

குடிப்பதற்கு ஒன்றும் தராமல் பேசிக்கொண்டே நிற்கிறேனே , வர்ஷு கண்ணு நீ தம்பியோடு பேசி கொண்டிரம்மா. நான் போய் சாப்பிட எடுத்துகொண்டு வருகிறேன் என்றாள்.

சூடாய் காபி கலந்து இரண்டு கோப்பைகளில் ஊற்றி எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தாள்.

ஆண்ட்டி காபி பிரமாதம். என் அம்மா போடுவது போலவே இருக்கிறது என்று புகழ்ந்தான்.

ஆண்ட்டி அந்த போட்டோவில் இருப்பது வர்ஷிதாவின் அப்பாவா என்றான்.
ஆமாம் தம்பி அவர் ஒரு விபத்தில் தவறி இரண்டாண்டுகள் ஆகிறது. அவர் போனதிலிருந்தே வர்ஷிதாவின் கலகலப்பு சந்தோசம் எல்லாம் காணாமல் போய்விட்டது.

வெளியே எங்கேயும் செல்வது கிடையாது . அதனால் தான் சென்னையிலிருந்து சொந்த ஊரான இங்கே அவளை அழைத்து வந்தேன்.

ஆண்ட்டி உங்கள் சொந்த ஊர் இதுதானா என்றான். ஆமாங்க தம்பி , உறவுகள் எல்லாம் இங்கே தான் பக்கத்துக்கு கிராமங்களில் இருக்கிறார்கள். நானும் வர்ஷுவின் அப்பாவும் காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் யாரும் எங்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்றார்.
இப்போது அவரும் எங்களை விட்டு போய்விட்டார். உறவுகள் என்று யாரும் இல்லாமல் அனாதை போல்
உணர்கிறோம் தம்பி. அடிக்கடி வந்து செல்லுங்கள். உங்களோடு பேசும் பொது நெருங்கிய உறவிடம் பேசுவது போல் மனம் பாரமின்றி இருக்கிறது என்றார்.

கவலையை விடுங்கள் ஆண்ட்டி நேரம் கிடைக்கும் போது கட்டாயம் வருகிறேன்.

உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றான். சொல்லுகள் தம்பி என்றாள். இந்த வாரம் ஞாயிறன்று வொர்கர்ஸ் எல்லோரையும் கொடைக்காணல் அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறோம்.

வர்ஷிதாவையும் அழைத்தால் வரவில்லை என்கிறாள். அதுதான் ஆண்ட்டி உங்களிடம் அனுமதி பெற்று கூட்டி செல்லலாம் என்று வந்தேன் என்றான்.

தம்பி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்ன பனி, குளிரில் சென்றால் அவளுக்கு கொஞ்சம் முடியாமல் போய் விடுகிறது தம்பி. மற்றபடி அவள் வெளியே சென்று எல்லோரோடும் மனம் விட்டு பேசி மகிழ்ந்தால் எனக்கு சந்தோசமே என்றாள்.

அப்படியானால் ஞாயிறன்று நானே வந்து வர்ஷிதாவை அழைத்து செல்லட்டுமா என்றான் வருண்.
சரிங்க தம்பி என்றாள் வர்ஷிதாவின் தாய்.

சார் உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என்றாள் வர்ஷிதா. நானா உன்னை சுமக்க போகிறேன் கார் தானே என்றான்.

சார் இது மிக பழைய கடி என்று சிரித்தாள் வர்ஷிதா.

சென்று வருகிறேன் ஆண்ட்டி என்று சொன்னவன் யாரும் பார்க்காத நேரத்தில் வர்ஷிதாவின் தந்தை போட்டோவை தன் செல்லில் படம் பிடித்தான்.


எப்படி உன் அம்மாவை சம்மதிக்க வைத்தேன் பார்த்தாயா ? என்று காலரை தூக்கி விட்டான் வருண்.

சரி ஒத்துகொள்கிறேன் சார் என்றாள்.

சரி நான் கிளம்பட்டுமா என்றான். சரி சார் என்றாள் மனமில்லாமல்.
அவனுக்கும் தான் அவளை பிரிய மனமில்லாமல் விடை பெற்று சென்றான்.


கொடைக்காணல் செல்லும் கனவோடு அவள் அன்று தூங்கிப்போனாள்.

(தொடரும்)

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (20-Nov-14, 12:57 pm)
பார்வை : 217

மேலே