ஊர் போட்ட முடுச்சு
ஊர் போட்ட முடுச்சு!!!
நீண்ட இடைவளிக்கு பின் அதாவது பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவனது கால்களும் மனது ஒன்றாய் பதிந்தது.அந்த ஊரில் சுற்றும் முற்றும் பார்த்தபடி கையில் பெட்டியும் தோளில் ஒரு பையும் மாட்டி கொண்டு அந்த தெருவில் நடந்து வருகிறான்.... அங்கு வீசும் அந்த காற்றில் கூட ஒரு சுகம் உடலுக்கு மட்டும் இல்ல மனதிற்கும்...அந்த காற்றில் ஒரு மனமும் இருந்தது அவனுக்கு...அந்த ரோடோரங்களில் விளையாடி மகிழ்ந்தது...கோலி.கில்லி..கபடி...என்று ஓடி பிடித்து விளையாடியது என்று அவனின் மனதில் மலரும் நினைவுகளுடன்..... அவனின் கண்களுக்கு குடிசை வீடுகள் எல்லாம் மாடி வீடுகளாக காட்சி அளிக்கிறது.ஊரே பெரும் மாற்றத்துடன் தான் இருக்கிறது...அது காலை பொழுதாக இருந்ததால் இவனை சிலர் அடையாளம் கண்டு...என்னடா ராமசந்திரா....எப்படி இருக்கே என்று நலம் விசாரித்துவாறு சென்றவர்கள் சில பேர்...பல பேருக்கு அடையாளம் தெரியாமல்...யாரோ புதுசு என்று நினைத்து சென்றவர்கள் பல பேர்...
இப்படி மெல்ல நடந்து வந்து வீட்டை அடைந்தான் ராமச்சந்திரன்....
எதிர் பார்த்து காத்திருந்த அவனின் பெற்றோருக்கு இவனை கண்டதில் மிக்க சந்தோசம்..அன்போடு வரவேற்ற அவனின் அப்பா ராஜ கண்ணும் அவனின் அம்மா கற்பகமும் தன் மகள் சுகந்தியை கூப்பிட்டவாரு உள் அறையை நோக்கினர்...வாமா...அண்ணன் வந்துட்டான் இந்த பெட்டிய உள்ளே கொண்டு போய் வை என்று குரல் கொடுக்க... பாவாடை தாவானியில் உள் அறையில் இருந்து ஓடி வந்தாள் சுகந்தி....
அந்த நிமிடமே அவர்கள் முன் வந்தது நின்றாள்...
ஏறிட்டு அண்ணனை பார்த்தாள் அடையாளம் தெரியாமல் நின்று கொண்டிடுருந்த ராமச்சந்திரனை கட்டி பிடித்து தன் அன்பை பரி மாறி கொண்டாள்...
சுகந்தி என்னமா வளர்ந்துட்டா??? அடையாளம் தெரியாமல் விழித்தான்..
பிறகு கற்பகம் சொன்னபிறகுதான் புரிந்து கொண்டான்... இவள்தான் தன் தங்கை சுகந்தி என்று...
என்னாம்மா சுகந்தி இப்படி மரமா வளர்ந்த்துட்டா???
பொம்பள புள்ள இல்ல அப்படி தாப்பா. என்றாள் கற்பகம்...
இவன் சிங்கபூர் போகும் போது சுகந்திக்கு மூனு வயசு..இந்த பத்து வருஷத்துல பெரிய பொம்பளையா நிக்குறா..இவனுக்கு மிகுந்த ஆச்சரியம்.சந்தோஷமும் கூட...
சரிப்பா நீ சொன்ன படியே உன் அத்தை பெண் மங்கையை பேசி முடித்துடோம்...நீ வந்த பிறகு கல்யாண தேதியை குறித்திடலாமுன்னு காத்திருக்கோம்..வர முகூர்த்ததுல கல்யாணத்த வச்சுடலாம்....
சரிமா என்றவன்.... ஏற்கனவே பேசி முடித்த விஷயம் தானே....
அம்மா நாம் ஊர் குளத்துல குளித்து ரொம்ப நாள் ஆச்சு...நான் போய் குளித்துட்டு வந்துடுறேன் என்று ஒரு டவளை எடுத்து கொண்டு அந்த ஊர் குளத்தை நோக்கி போய் விட்டான்....
ஒரு காலத்தில் அந்த குளத்தை சுற்றி காடாக பட்ட மரமாக இருந்தது....இப்ப அந்த குளமே ஒரு பூங்காவாக காட்சி அளிக்கிறது...எங்கும் பசுமையாக குளத்தை சுற்றிலும் தடுப்பு சுவர்...மிக பிரமாதமாக இருக்கிறது....
அந்த குளத்தின் அருகே கூடி இருந்த கூட்டதை பார்த்து...ஊர் என்னமா மாறி போச்சு...என்று நினைத்தவாறு குளத்தில் இரங்கி குளிக்க ஆரம்பித்தான்....
இவனை அடையாளம் கண்டவர்கள் நலம் விசாரித்தார்கள்....
இவனின் நண்பன் மோகன்...இரண்டு குழந்தைக்கு அப்பா என்று தன்னை அறிமுகம் செய்தவாறு....பழைய நினைவுகளுடன் பேசி கொண்டனர்... இருவரும்...
ஊர் என்னம்மா மாறி இருக்கு..யாரடா நாம் ஊர் தலைவர்... நல்லா ஊரை சீர் படுத்தி இருக்கார் என்றான் மோகனிடம்..
தலைவரை தெறிய படுத்தியவனாய் மோகன் ஆரம்பித்தான்...
டேய் சொல்லுறேன்னு தாப்பா நினைக்காதே...இத எப்படி சொல்லுரதுதான்னு....தெரியல்ல...நீ வேற என் பாலிய நண்பனாயிட்டே....
ம்ம்ம்.....நீ உன் அத்த பொண்ண கடனும்ன்னு இருக்கியே....அவ நாம் ஊர் தலைவர் பையனோட தப்பா நடந்து அது ஒரு பெரிய பிரச்சனையா ஆகி போச்சு.... ஊர்ல இப்படி தான் பேசிகிராங்க...நான் எதையும் கண்ணால பார்க்கல.....
எதோ ஊர் தலைவர் புள்ளன்னு மேட்டர அப்படியே அமுக்கி வாசிச்சுடானுக்க....ஏதோ நீ என் நண்பன்னு சொல்லிட்டேன்...என்று சொல்லிவிட்டு போய் விட்டான் மோகன்...
இதை கேட்டது முதல் ராமச்சந்திரனுக்கு மன குழப்பம்...இதை பற்றி அம்மாவும் ஒன்னும் சொல்லவில்லை. அப்பாவும் சொல்லவில்லை...இந்த விஷயத்தை பற்றி மேலும் சில பேர் இவனுக்கு தெரிவித்ததால்....
மங்கையை கல்யாணம் செய்ய மாட்டேன் என்று தீர்த்து சொல்லிவிட்டான் ராமச்சந்திரன்...
ஏன் எதற்கு என்று கற்பகமும்,ராஜா கண்ணும் கேட்டு பார்த்தார்கள்...
அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..
இதோ பாருப்பா சின்ன வயசு முதலே உனக்கும் மங்கைக்கும் பரிசம் போட்ட மாதிரி பேசி வச்சுட்டோம்... இது நாம் உறவுகளுக்கு எல்லாம் தெரியும்.. இப்ப போய் வேணாம்முன்னு சொன்ன சிங்காபூர் போய் சம்பாதித்த பண திமிர்ன்னு ஊர் பேசும்....இதனால் உறவுகளும் ஒதிங்கி போகும்... இதனால குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.. காரணம் என்னவென்று கற்பகம் பிடிவாதமாய் கேட்டு கொண்டாள்...
இதோ பாருடா எனக்கு இருக்கிறது ஒரு தங்கக்சி..அவ வச்சிருகிறது ஒரு பொண்ணு...அவ அப்பனும் அனாதையா விட்டுட்டு போய் சேந்துட்டான்...இந்த நிலையில நான்தான் அந்த குடும்பத்த பாத்துட்டு இருக்கேன்...எம் புள்ள உம் மகள கட்டமாட்டேன்னு சொல்லுறான்னு நானே போய் என் தங்கசசி கிட்ட சொல்றதுக்கு பதிலா நான் தூக்கு மாட்டி செத்து போறதே மேல் என்று ராஜா கண்ணு..
தான் கேள்வி பட்டதை உண்மையா என்று அவன் வெளிப்பட கேட்டு விட வேண்டும் என்று எண்ணி ராம சந்திரன்...
அப்பா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்ச்சாகனும்... விஷயத்தை எடுத்து சொன்னான்.....
கற்பகமும்...ராஜகண்ணும்....புருவங்களை உயர்த்தி ஒருவருக்கொருவரை பார்த்து கொண்டனர்...இது என்ன கற்பகம் புதுசா ஒரு கத...
உனக்கு யார் இப்படி ஒரு விஷயத்த சொன்னது...என்று கற்பகம் கேட்க..
நான் கேள்வி பட்டத கேட்கிரேனம்மா....
ராஜா கண்ணு குறிக்கிட்டு....இதுதான் விஷயமா???...நம்ம ஊர் தலைவர் புள்ளைக்கு நம்ம மங்கையை பெண் கேட்டு வந்தார்கள்...முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டோம்...
இத ஒரு விஷயத்த வச்சு ஊர் இப்படி முடுச்சு போட்டுடுச்சா....என்று அந்த ஊர் தலைவரிடம் ராஜ கண்ணும்..ராம சந்திரனும் விவரத்தை சொல்லி விவரம் கேட்க... நேரடியாக அந்த தலைவர் வீட்டில்...
ஊர் தலைவர் இதோ பாருப்பா ராம சந்திரா..நீ மங்கைய கல்யாண் பண்ண குடுத்து வச்சிருக்கணும்...எம் புள்ளைக்கு மங்கைய கட்ட விரும்புனது உண்மை.எனக்கும் மங்கைதான் மருமகளா வரணும்முன்னு எனக்கும் விருப்பம்...முறை படி பெண் கேட்டு உன் அப்பவை சந்தித்து பேசினேன் உன் அப்பா மங்கை உனக்காக காத்திருக்கிறாள் என்று சொல்லி தட்டி களிச்சுட்டார்....பிறகும் என் மகன் தொல்ல தாங்க முடியல மீண்டும் உன் அம்மா அப்பா விடம் பெண் கேட்டேன்..முடியாதுன்னு முடிவா உன் அப்பா சொன்னதுனாலே.....நானும் அமைதியா இருந்துட்டேன்..எம் புள்ள இன்னைக்கு வர மங்கையத்தான் கட்டுவேன்னு பிடிவாதமாக இருக்கிறான்.....
இப்ப மட்டும் என்ன ராஜ கண்ணு ராம சந்திரன் வேண்டாம்முன்னா எம் புள்ளைக்கு....என்று ஆரபித்தார்....
ஊர்ல இப்படி நடக்காத ஒரு விஷயத்தை எட்டு கட்டி பேசுறது சரி இல்லைங்க....இது உண்மையா இல்ல பொய்யான்னு நிருபிகனும்ன்னா பஞ்சாயத்த கூட்டி ஒரு முடிவு சொல்லுங்க...இது ஒரு வயசு பொண்ணு வாழ்க்க பிரச்சன....என்று ராஜ கண்ணு கேட்டு கொண்டார்..
அதன் படி ஊர் தலைவரும் சரி பஞ்சாயத்த கூட்டி நிருபிச்சுடலாம்ன்னு சொல்ல...
இதை கேட்டு கொண்டி இருந்த தலைவரின் மகன்...
இல்ல அப்பா நான் தான் எப்படியாவது மங்கைய கட்டனும்முன்னு இப்படி ஊர்ல நாலு பேர்கிட்ட சொல்லி....
தப்பு எம் மேலப்பா.பஞ்சாயதல்லாம் கூட்ட வேண்டாம் என்ன மன்னிச்சிருக்க என்று தலைவரின் மகன் அவர்கள் முன்னிலையில் அவன் சொல்ல...
மகன் செய்த தவறுக்கு தலைவர் மன்னிப்பு கேட்க....
இப்படியாக வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்..
கற்பகத்திடம் விபரம் சொல்ல...
கற்பகம் ஊர் வாய மூட ஒல மூடிய வேணுமா...ஒண்ணுண்ன ஊர் பல விதமா பேசும்....
எம் புள்ளைக்கு எப்படி ஒருத்தி பொண்டாட்டியா வரணும் ஏன் எம் மருமகள் எப்படி இருக்கனும்ன்னு எனக்கு தெரியாத சந்திரா....
ஒரு நிஷத்துல எங்க மேல பெரிய கள்ள தூக்கி போட்டுட்டியே...ஒரு வயசு பொண்ணு வீட்டுல இருந்தா?? நாலு பேர் பெண் கேட்டு தான் வருவாங்க... ஏன் உன் தக்கச்சிய மட்டும் யாரும் பெண் கேட்டு வரலையா???அவ சமஞ்சு ஆறு மாதம் கூட ஆகல..இது வர நாலு மாப்பிள்ள வீடு வந்து போய்டுச்சு..இதுக்கு போய் இப்படியா கத கெட்டி விடுறது... பெத்தவங்களுக்கு தெரியாதா..எத எப்படி செயனும்முன்னு...மத்தவங்க சொல்றத பெரிய விஷயமா எடுத்துட்டு.....என்னப்பா என்று கற்பகம் சொல்லி முடித்தாள்.
தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டான் ராமச்சந்திரன்...
நல்ல வேலை இந்த விஷயம் உன் அத்தைக்கு தெரியல தெரிந்ததால் எத்தன கஷ்ட படுவார்கள் என்று சலித்து கொண்டாள் கற்பகம்....