என்னவனே உன் நினைவாய்

என்னவனே...

விடியற் காலை பொழுது
ஒவ்வொன்றும் உந்தன் விழிகளில்
என் விழிகள் விழித்திட வேண்டும் ....

உன் மார்பில்
என் முகம் புதைத்து
உறங்க வேண்டும் இரவுகள்
ஒவ்வொன்றும்....

உந்தன் கரங்கள் கோர்த்தே
செல்ல வேண்டும்
என் வாழ்க்கை பாதை ....

ஊடல்கள் கொண்டு
என்னை ஊமையக்கிவிடுகிறாய் ...

மௌனக்காதல் கொண்டு
என்னை காயபடுத்தாதே...

வேண்டுமடா நிமிடம்
ஒவ்வொன்றும் உன் அன்புக்காதல்...

உன் மௌனத்தில்
உணர்கிறேன் ....

உன் மீது -நான்
கொண்ட காதலின்
ஆழம் என்னவென்று

என் கண்ணீரில்....

நீ என் மீது கொண்ட
அன்பு இப்புவியில்
இன்னும் பல ஜென்மங்கள்
வாழ சொல்லுதடா என்னை ...

என் அன்னையின் அன்பை
எனக்கு முழுமையாக
தந்த என் காதல் கணவனே...

வேண்டும் மாமா

"நீ எனக்கு மட்டும் "
"என் ஆயுள் முழுவதும்"
" உன் அன்புக்கு மட்டுமே "

""""அடிமையடா இவள் இதயம் """

உன் வரவை எண்ணியே
உன்னவள் மனம்...

"என் மரணம் -உன்
மடியில் மட்டுமே...."

எழுதியவர் : சகிமுதல்பூ (20-Nov-14, 4:03 pm)
பார்வை : 200

மேலே