என்னவனே உன் நினைவாய் -சகி

அன்பே....

உண்மை அன்பை
உணர்ந்தியவனே....

அன்று ...

தூரத்து தேசத்தில் நீ....

என் விழிகள் கலங்கியதை
வார்த்தைகளில் உணர்ந்து
ஏனடி அழுதாய் என்பாய் அன்பாய்....

இன்று...

என் விழிகள்
தினம் தினம் கலங்குகிறது....

காரணம் உன் பிரிவு...

என் வலிகளை உணர்ந்து
உணராதவனாய் நீ....

உன் அன்பை
என்னை பிச்சை கேட்க வைத்தாய்...

உன் அன்பை வலிகளான
வார்த்தைகளில் கொடுத்துதாய் ...

ஏற்றுக்கொண்டேன் வலிகளுடனே...
உன் அன்பை...

உன் காதலை உணர்ந்த நான்
என் காதலை என்றுமே உணராத நீ...

காத்திருப்பேன் என்னவனே...

நீ உணரும் தருணத்திற்காக ...

சுகம் தான் ...

நீ தந்த வலிகளுடன் -நம்
காதல் நினைவுகளுடன் காத்திருப்பது....

எனக்கெனவே நீ
உனக்கெனவே நான்....
இதில் எந்த மாற்றமும் இல்லை...

தொடரவேண்டுமடா நம்
பந்தம் ஜென்மங்கள் பல....

என்னை முழுமையாக
நீ உணரும் வரை நீ
தரும் காதல் வலிகளுடனே
காத்திருப்பேன் மாமனே....

எழுதியவர் : சகிமுதல்பூ (21-Nov-14, 4:14 pm)
பார்வை : 285

மேலே